அருண பத்திரிகையின் செய்தியினை நிராகரித்தது மு.கா
அருண சிங்கள பத்திரிகையில் இன்று (27) வியாழக்கிழமை வெளியாகிய செய்தியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்தது.
இது தொடர்பில் அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை இன்றிரவு 10.00 மணியளவில் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
This news is mischievous and factually https://t.co/l7dtzGO4zz erroneously characterizes the content of our discussions with the High Commissioner. It is preposterous to imply that a seasoned diplomat could have spoken about internal matters in such an intrusive manner. pic.twitter.com/R3TXZSh3WC
— Rauff Hakeem (@Rauff_Hakeem) August 27, 2020
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற தூதுக்குழுவிற்கும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (25) கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் '13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா அவதானம்' எனும் தலைப்பில் அருண பத்திரிகையில் செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது.
"13ஆவது திருத்தத்தினை நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவினை இந்தியா அரசாங்கம் அவதானித்து வருவதாகவும்" குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எனினும் குறித்த செய்தி ஈட்டுக்கட்டப்பட்டு போலியாக வெளியிடப்பட்டுள்ளது" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்திய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பு, குறித்த செய்தியில் திரிவுபடுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)