சர்வதேச தாய் மொழி தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

 சர்வதேச தாய் மொழி தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

சர்வதேச தாய் மொழி தினம் இன்று (21) புதன்கிழமை கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ரஹீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சர்வதேச தாய் மொழி தினத்தினையொட்டி பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் இதன்போது பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு கல்வி அமைச்சு, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மற்றும் இலங்கை சாரணர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இதேவேளை, பேராதனை பல்கலைக்கழகம், ருஹுனு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சர்வதேச தாய் மொழி தினத்தினை முன்னிட்டு இன்று விசேட ஆராய்ச்சி மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அத்துடன், இலங்கை சாரணர் சங்கத்துடன் இணைந்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வொன்றினையும் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.