இந்த வருடத்தின் 3ஆம் காலாண்டில் தோப்பூருக்கான ATM திறக்கப்படும்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தோப்பூர் பிரதேச மக்களின் நீண்ட காலத் தேவையாகவுள்ள ATM என்று அழைக்கப்படும் தன்னியக்க பணப் பரிமாற்றல் இயந்திரத்தினை இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் திறக்கவுள்ளதாக மக்கள் வங்கி உறுதியளித்துள்ளது.
பண வைப்பு அல்லது மீளப் பெறல் மற்றும் பட்டியல் கொடுப்பனவு செலுத்தல் உள்ளடங்கிய பண மறுசுழற்சி இயந்திரமொன்றினையே (Cash Recycler Machines- CRM) தோப்பூரில் நிறுவவுள்ளதாகவும் மக்கள் வங்கி குறிப்பிட்டது.
மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சுமார் 22 ஆயிரம் பேர் வாழ்க்கின்றனர். இப்பிரதேச மக்களின் நலன்கருதி இலங்கை வங்கியினால் கிளையொன்றும் மக்கள் வங்கியினால் சேவை நிலையமொன்றும் கடந்த 2009ஆம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக அமானா வங்கியின் சுய வங்கிச் சேவை நிலையமொன்றும் இப்பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக செயற்படுகின்றது. கடந்த 15 வருடங்களாக இப்பிரதேசத்தில் செயற்படுகின்ற அரசாங்க வங்கிகள் இரண்டினதும் தன்னியக்க
பணப் பரிமாற்றல் இயந்திரம் இதுவரை நிறுவப்படவில்லை.
இதனால் பல கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து மூதூர் மற்றும் சேருநுவர ஆகிய பிரதேசங்களிலுள்ள தன்னியக்க பணப் பரிமாற்றல் இயந்திரத்தினையே தோப்பூர் மக்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இப்பிரதேச மக்களின் நீண்ட கால பிரச்சினை தொடர்பில் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றுக்கு தனித் தனியாக தகவலறியும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
தகவலறியும் விண்ணப்பத்தில் கோரப்பட்ட பல தகவல்கள் இலங்கை வங்கியின் தகவல் அதிகாரியான பீ.எம். விதான ஆராச்சியினால் வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில் மக்கள் வங்கியின் தகவல் அதிகாரியான சமந்தி சேனநாயக்கவினால் வழங்கப்பட்ட பதிலிலேயே தோப்பூர் பிரதேசத்திற்கான தன்னியக்க பணப் பரிமாற்றல் இயந்திரம் விரைவில் நிறுவப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் தோப்பூர் சேவை நிலையத்தில் தற்போது 9,287 சேமிப்புக் கணக்குகள் திறம்பட செயற்படுவதாக தெரிவித்த அவர்ரூபவ் இதனைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கான தன்னியக்க பணப் பரிமாற்றல் இயந்திரத்திம் இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் திறக்கப்படவுள்ளது. என்றார்.
எனினும், "இந்த இயத்திரத்தினை நிறுவவுள்ள காணிக்கான அனுமதியினை மூதூர் பிரதேச செயலாளரிடமிருந்து வங்கி பெற்றிருந்தாலும்ரூபவ் பகுப்பாய்வு திட்டத்தின் கீழ் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை" என மக்கள் வங்கியின் தகவல் அதிகாரியான சமந்தி சேனநாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளைரூபவ் திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் வங்கியினால் 24 தன்னியக்க பணப் பரிமாற்றல் இயந்திரங்களும் இலங்கை வங்கியினால் 30 தன்னியக்க பணப் பரிமாற்றல் இயந்திரங்களும் செயற்படுத்தப்படுகின்றன.
இதில் வங்கிக் கிளையோ, சேவை நிலையமோ இல்லாத திருகோணமலை கடற் படைத் தளம், பொது வைத்தியசாலை திருகோணமலை ஓப் சைட்ரூபவ் சேருநுவர ரஜமகா விகாரை மற்றும் வெருகல் பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் மக்கள் வங்கியினால் தன்னியக்க பணப் பரிமாற்றல் இயந்திரங்கள் செயற்படுத்தப்படுகின்றன.
இது போன்று திருகோணமலை மாவட்ட செயலகம், விமானப் படைத் தளம், கடற் படைத் தளம், நிலாவெளியிலுள்ள திருகோணமலை பல்கலைக்கழகம், திருகோணமலை பொது வைத்தியசாலை, மாகாண பிரதம செயலகம்ரூபவ் குச்சவெளி பிரதேச சபை ஆகிய இடங்களில் வங்கிக் கிளையோரூபவ் சேவை நிலையமோ அமையப் பெறாத நிலையில் இலங்கை வங்கியினால் தன்னியக்க பணப் பரிமாற்றல் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதேவேளை, கிண்ணியாவிலுள்ள கச்சகொடித்தீவு மற்றும் கோமரன்கடவல ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்கள் வங்கியின் சேவை நிலையங்களில் தன்னியக்க பணப் பரிமாற்றல் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், தோப்பூர் பிரதேசத்தில் வங்கிக் கிளையும்ரூபவ் சேவை நிலையமும் செயற்படுகின்ற நிலையில் தன்னியக்க பணப் பரிமாற்றல் இயந்திரங்களை நிறுவ குறித்த இரண்டு அரச வங்கிகளினாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)