குருநாகல் போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவிலியிருந்து பரீட் இராஜினாமா

குருநாகல் போதானா வைத்தியசாலையின்  பணிப்பாளர் பதவிலியிருந்து பரீட் இராஜினாமா

குருநாகல் போதானா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பதவியிலிருந்து டாக்டர் என். பரீட், நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த இராஜினாமா தொடர்பிலான அறிவிப்பினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்கவின் ஊடாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் எஸ்.எச். முனசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

இந்த இராஜினாமா தொடர்பான விடயத்தினை டாக்டர் என். பரீட், விடியல் இணையத்தளத்திற்கு உறுதிப்படுத்தினார்.

குருநாகல் போதானா வைத்தியசாலையின் பணிப்பாளராக செயற்பட்ட சரத் வீரபண்டாரவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் காரணமாக குறித்த பதவியிருந்து அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வட மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்திய நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான டாக்டர் என். பரீட தற்காலிகமாக ஒரு மாத காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.

எனினும் அவருக்கு எதிராக இனவாத பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்தே குருநாகல் போதானா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பதவியினை அவர் இராஜினாமாச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.