ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக சமகி ஜன பலய தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலய (ஐக்கிய மக்கள் சக்தி) கட்சியின் உறுப்பினர்களை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சமகி ஜன பலவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மதும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்டது.
சமகி ஜன பல கட்சியின் உறுப்பினர்களை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)