9 மாதங்களுக்குள் குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணம்: வீதி அபிவிருத்தி அதிகாரசபை
அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணிக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
குறிஞ்சாக்கேணி களப்பில் இழுவைப் படகொன்று விபத்துக்குள்ளாகி, பாடசாலை மாணவர்கள் உட்பட அறுவர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது என்று நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பேமசிறி தெரிவித்தார்.
'இலங்கையின் வீதிக் கட்டமைப்பின் புதிய தகவல்கள்' என்ற தலைப்பில், இன்று (25) வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதி ஊடகமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
Comments (0)
Facebook Comments (0)