பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டமைக்கு GMOA எதிர்ப்பு
கொவிட் - 19 இற்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டமைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இன்று (30) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளரான வாசன் ரட்னசிங்கம் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள பைசர் தடுப்பூசிகள் ஒரு சிலரிடம் மாத்திரம் காணப்படுகின்றன. இதனை சுகாதார துறையினருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை சுகாதார அமைச்சரிடம் முன்வைத்துள்ளோம்.
தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தில் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன. இராணுவத்தினரின் தடுப்பூசி நிலையங்களுக்கு வரையறை அற்ற வகையில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், சுகாதார அமைச்சின் கீழுள்ள தடுப்பூசி ஏற்றல் நிலையங்களுக்கு அவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படுவதில்லை" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)