STF இன் கட்டளையிடும் அதிகாரியாக வருண ஜயசுந்தர நியமனம்
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளையிடும் அதிகாரியாக மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்க, திருகோணமலை பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியில் மேலும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நால்வர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிணங்க, பிரதி பொலிஸ் மா அதிபர் B.R.S.R. நாகஹமுல்ல, கொழும்பு போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு மற்றும் மேல் மாகாண வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மனித வள முகாமைத்துவம் மற்றும் சர்வதேச தொடர்புகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர குமார அந்த பொறுப்புக்களுக்கு மேலதிகமாக ஆட்சேர்ப்பு மற்றும் பரீட்சைகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதி பொலிஸ் மா அதிபர் U.P.A.D.K.P. கருணாநாயக்க தேசிய பொலிஸ் உடற்பயிற்சி நிலையத்துக்கு பொறுப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பிரதி பொலிஸ் மா அதிபர் H.N.K.D. விஜய ஶ்ரீ பயிற்சி மற்றும் சேவைப்பிரிவுக்கு பொறுப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Comments (0)
Facebook Comments (0)