ஜாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசலில் ‘சமூக உணவு அலமாரி’
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டமொன்றினை கொழும்பு - 07 இலுள்ள ஜாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசல் முன்னெடுத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு "சமூக உணவு அலமாரி" (Community Food Pantry) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இப்பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள அலுமாரியில் அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி, தேயிலை, எண்ணெய், பால்மா, உப்பு, வெங்காயம், தேங்காய், உருளைக் கிழங்கு மற்றும் பலசரக்குப் பொருட்கள் போன்றவற்றினை வைக்க முடியும். இப்பொருட்களை தேவையுடையவர்கள் சுய அடிப்படையில் எடுத்துக் கொள்ள முடியும்.
இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்க விரும்புகின்றவர்கள் கொமர்ஷல் வங்கியின் நாரஹேன்பிட்ட கிளையிலுள்ள ஜாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசலின் 1220016889 எனும் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்ய முடியும்.
இது போன்ற திட்டங்களை நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும் முன்னெடுத்து நாளந்தாம் மூவேளை உணவுக்காக கஷ்டப்படும் மக்களுக்கு இன, மத, பேதமின்றி உதவ வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)