NMRAஇல் பதிவுசெய்யப்படாத Hand Sanitizer விற்பனைக்கு தடை
தேசிய மருநதுகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையில் (NMRA) பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பான்களை ( Hand Sanitizer) விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 10(1) (ஆ)(ii) ஆம் பிரிவின் கீழேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தடை எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தவிசாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்கவினால் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)