கிழக்கு மாகாண பிரதம செயலாளராக துசித நியமனம்

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக துசித நியமனம்

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக துசித பி. வணிகசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.வீ.ஜயசூந்தரவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக கடந்த ஏழு வருடங்களாக கடமையாற்றிய டி.எம். சரத் அபேயகுணவர்த்தன திறன் அபிவிருத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சிரேஷ்ட சிவில் நிர்வாக அதிகாரியான துசித பி. வணிகசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

களனி பல்லைக்கழக பட்டதாரியான இவர் 1991ஆம் ஆண்டு இலங்கை சிவில் நிர்வாக சேவையில் இணைந்துகொண்டார். பிரதேச செயலாளராக பல்வேறு பிரதேசங்களில் கடமையாற்றிய இவர், அம்பாறை மற்றும் கேகாலை மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இறுதியாக  பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி இவர் ஈஸ்டர் தற்கொலை தாக்குதலின் பின்னர் சில காலம் பதில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறை பிரதேசத்தினைச் சேர்ந்த இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

-றிப்தி அலி-