நாட்டுக்காக உயிரையே அர்ப்பணிக்கத் துணிந்த என்னை யாசகம் கேட்கும் நிலைக்குத் தள்ளாதீர்கள்'

"பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின் உத­வி­யினால் உயிர் தப்­பிய நான் கடந்த 10 மாதங்­க­ளாக எழும்பி நடக்க முடி­யாமல் படுத்த படுக்­கை­யி­லி­ருந்தே சிகிச்சை பெற்று வரு­கின்றேன்" என மாவ­னல்லை, தனா­கமை பிர­தே­சத்­தினைச் சேர்ந்த 38 வய­தான ராஸீக் முஹம்­மது தஸ்லீம்  விடியல் இணையத்தளத்திடம் கூறினார்.

"மாவ­னல்லை பிர­தே­சத்தில் சில அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் புத்தர்  சிலை உடைக்­கப்­பட்­ட­போது அப்­பி­ர­தே­சத்தில் சிங்­கள – முஸ்லிம் கல­வ­ர­மொன்று ஏற்­படக் கூடிய சாத்­தியம் காணப்­பட்­டது.

இதனைத் தவிர்க்கும் முக­மா­கவும், நாட்டின் நல்­லி­ணக்­கத்­திற்­கா­கவும் சிலை­யினை உடைத்­த­வர்­களை கண்­டு­பி­டித்து சட்­டத்தின் முன்­நி­றுத்தும் நட­வ­டிக்­கையில் முன்­னின்று செயற்­பட்­ட­தா­லேயே தனக்கு இந்த நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக" அவர் கூறினார்.

"இந்த உழைப்­பிற்­கான பரி­சா­கவே நான் சுடப்­பட்டேன்.  இதனால் கடந்த 10 மாதங்­க­ளாக சிறையில் அடைக்­கப்­பட்­ட­வனைப் போன்று நான்கு சுவர்­க­ளுக்கு மத்­தியில் சிக்­குண்டு சிகிச்சை பெற்று வரு­கிறேன்" என்றும் அவர் தனது நிலை­மையை விளக்­கினார்.

இந்த சம்­ப­வத்தின் பின்னர் மூன்று குழந்­தை­களைக் கொண்ட தனது குடும்பம் இன்று பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­நோக்­கி­யுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமூ­கத்­திற்­கா­கவும் நாட்­டிற்­கா­கவும் செய்த சேவைக்­காக யாசகம் கேட்­டுக்கும் நிலைக்கு என்னைத் தள்­ளி­விட வேண்டாம் என்றும் தான் பகி­ரங்­க­மாக வேண்­டுகோள் விடுப்­ப­தாக தஸ்லீம் கூறு­கிறார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு மற்றும் நீர்­கொ­ழும்பு ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள கிறிஸ்­தவ தேவ­ால­யங்கள் மற்றும் கொழும்­பி­லுள்ள மூன்று, ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்கள் ஆகி­ய­வற்றில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­த­லினால் 45 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட  259 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் சுமார் 500க்கு மேற்­பட்டோர் காய­ம­டைந்­தனர்.

இந்த சம்­ப­வத்­தினால் நாடளா­விய ரீதியில் பல்­வேறு தரப்­பினர் நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் குறித்த பாதிப்­பி­லி­ருந்து இன்று வரை மீள­மு­டி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றனர்.  

இந்த தற்­கொலை தாக்­கு­த­லுக்கு முன்னர் சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் வெள்­ளோட்ட நட­வ­டிக்­கை­யாக மேற்­கொள்­ளப்­பட்ட சம்­ப­வமே மாவ­னெல்லை நகரை அண்­டிய பிர­தே­சங்­களில் காணப்­பட்ட புத்தர் சிலைகள் தாக்­கப்­பட்­ட­மை­யாகும்.

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இடம்­பெற்ற இந்த தாக்­கு­த­லினை சாதீக் இப்­ராஹிம் மற்றும் சாஹீத் இப்­ராஹிம் சகோ­த­ரர்கள் தலை­மை­யேற்று வழி­ந­டத்­தினர். குறித்த சம்­ப­வத்தின் பின்­ன­ணி­யி­லி­ருந்­த­வர்­களை பொலிஸார் கைது செய்­வ­தற்கு உத­வி­யாக செயற்­பட்­ட­வரே இந்த தஸ்லீம்.

இதற்கு பழி­வாங்கும் நோக்­கி­லேயே கடந்த 2019 மார்ச் 9 ஆம் திகதி அதி­காலை பயங்­க­ர­வா­தி­க­ளினால் தஸ்லீம் சுடப்­பட்டார். இவர் உறக்­கத்தில் இருந்த போது, அத்­து­மீறி வீடு புகுந்த பயங்­க­ரவா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டில் படு­கா­ய­ம­டைந்த அவர், பல மாதங்­களாக நினை­வி­ழந்து காணப்­பட்டார்.

வைத்­தி­யர்­களின் தீவிர முயற்சி கார­ண­மாக தற்­போது தேறி வரு­கின்ற போதிலும் தலையில் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கி சூடு கார­ண­மாக அவ­ரது உடலின் இடது பக்க பகுதி செய­லி­ழந்­துள்­ள­துடன் எழும்பி நிற்க முடி­யாத படி படுக்­கை­யி­லேயே தனது நாட்­களைக் கடத்தி வரு­கிறார்.  இவர் எப்­போது பழைய நிலைக்கு மீள்வார் என்­பதை உறு­திப்­ப­டுத்த முடி­யா­துள்­ள­தாக வைத்­தி­யர்கள் கூறு­கின்­றனர்.

இந்த நிலையில் தஸ்லீம் தன்னைக் கொல்ல முயற்­சித்­ததன் பின்­னணி, அதனால் தனக்கு ஏற்­பட்ட பாதிப்­புகள் மற்றும் தனது குடும்­பத்தின் தற்­போதைய பொரு­ளா­தார நிலை­மைகள் குறித்து விடியல் இணையத்தளத்திடம் மனந்­தி­றந்து பேசினார். அதன் விபரம் வரு­மாறு :

Q: உங்கள் மீது துப்­பாக்கி சூடு மேற்­கொள்­ளப்­பட்­டதன் பின்­னணி என்ன?

கடந்த வருட இறு­தியில் மாவ­னல்­லையை அண்­டிய பிர­தே­சங்­களில் சில புத்தர் சிலைகள் உடைக்­கப்­பட்­டன. இதனால் அப்­பி­ர­தே­சத்தில் சிங்­கள – முஸ்லிம் கல­வ­ர­மொன்று ஏற்­படக் கூடிய வாய்ப்­பொன்று காணப்­பட்­டது.  அக்­காலப் பகு­தியில் அமைச்­ச­ராக செயற்­பட்ட கபீர் ஹாசீமின் இணைப்புச் செய­லா­ள­ராக நான் செயற்­பட்டேன். அவரின் அறி­வு­றுத்­த­லுக்­க­மைய பொலி­ஸா­ருக்கு உத­வி­யாக சந்­தேக நபர்­களை கைது செய்­வ­தற்கு நான் உதவி புரிந்தேன்.

இந்த விவ­கா­ரத்­துடன் கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் தொலை­பேசி உரை­யா­டல்­களை பரிசீ­லித்த போது பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கின. சந்­தேகநபர்­க­ளுடன் தொடர்­பு­டைய குழு­வொன்று புத்­த­ளத்­தி­லுள்ள விட­யமும் தெரிய வந்­தது.

இத­னை­ய­டுத்து குறித்த குழு­வி­னரை தேடி பொலி­ஸா­ருடன் நான் புத்­தளம் சென்றேன். இதன்­போது குறித்த குழு­வி­ன­ருடன் பொலிஸார் தொலை­பேசி உரை­யா­டலை மேற்­கொண்­டனர். எனினும் பொலி­ஸா­ருக்கு தமிழ் தெரி­யாது. அதே­போன்று அங்­குள்­ள­வர்­க­ளுக்கு சிங்­களம் தெரி­யாது. இதனால் தொடர்­பாடல் பிரச்­சினை ஏற்­பட்­டது.

இதனால் குறித்த குழு­வி­ன­ருடன்  நான் உரை­யா­டினேன். அப்­போது அவர்கள் அக்­கு­ற­ணையில் இருப்­ப­தாக குறிப்­பிட்­டனர். எனினும் பொலி­ஸாரின் தொலை­பேசி தொடர்­பாடல் கண்­கா­ணிப்பின் மூலம் புத்­தளம், வணாத்­த­வில்லு பிர­தே­சத்­தி­லேயே அவர்கள் இருக்­கின்ற விடயம் தெரிய வந்­தது. இத­னை­ய­டுத்து பொலி­ஸாரின் வாக­னத்­தினை புத்­தளம் பொலிஸில் நிறுத்­தி­விட்டு புத்­த­ளத்­தி­லுள்ள எனது நண்­பரின் முச்­சக்­கர வண்­டியில் குறித்த இடத்­திற்கு சென்றோம்.

அங்கு சென்ற போதுதான் நூற்­றுக்­க­ணக்­கான எடை­கொண்ட பாரிய வெடி­பொ­ருட்கள் மற்றும் நாச­கார திர­வி­யங்கள் கைப்­பற்­றப்­பட்­டன. இது­போன்ற பாரிய வெடி­பொ­ருட்கள் இங்கு கைப்­பற்­றப்­படும் என்று நாங்கள் ஒரு­போதும் எதிர்­பார்க்­க­வில்லை.

சந்­தே­க­ந­பர்­களை கைது செய்யச் சென்ற போதே எதிர்­பா­ரா­த­வி­த­மாக இவை கைப்­பற்­றப்­பட்­ட­துடன் அச் சம­யத்தில் அங்கு தங்­கி­யி­ருந்த நான்கு பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

இந்த சந்­தர்ப்­பத்தில் பொலிசார் மற்றும் இரா­ணு­வத்தின் அருகே நானும் நிற்­கின்ற புகைப்­ப­ட­மொன்று ஊட­கங்­களில் வெளி­யா­கின.

இத­னை­ய­டுத்தே பயங்­க­ர­வா­தி­களின் திசை என் மீது திரும்­பி­யது. இது தொடர்பில் அந்­நாட்­களில் பொலிஸ் முக்­கி­யஸ்தர் ஒருவர் என்னை தொடர்­பு­கொண்டு அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு அறி­வு­றுத்­தினார்.

Q: வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் பாரிய வெடி­பொ­ருட்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட போது உங்­களின் மன­நிலை எவ்­வாறு காணப்­பட்­டது?

இந்த வெடி­பொ­ருட்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட போது சாதிக் மற்றும் சாஹித் சகோ­த­ரர்கள் கைது செய்­யப்­ப­ட­வில்லை. இதன் உரி­மை­யா­ளர்கள் அவர்கள் என அந்த தோட்­டத்­தி­லி­ருந்து கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்கள் தெரி­வித்­தனர்.

இதன் கார­ண­மாக குறித்த சகோ­த­ரர்­க­ளினால் ஏதா­வ­தொரு அசம்­பா­விதம் எதிர்­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என நான் அஞ்­சினேன். இது தொடர்பில் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கும் நான் தெரி­வித்தேன்.

Q: உங்கள் மீது துப்­பாக்கிப் பிரே­யோகம் மேற்­கொள்­ளப்­பட்ட சம்­பவம் நினை­வி­ருக்­கி­றதா?

மார்ச் ஒன்­பதாம் திகதி அதி­கா­லை­யி­லேயே குறித்த சம்­பவம் இடம்­பெற்­ற­தாக மனைவி எனக்குத் தெரி­வித்தார். அதற்கு முதல் நாள் இரவு மாவ­னெல்லை நகரில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்­டு­விட்டு அங்­கி­ருந்து இரவு 10.30 மணி­ய­ளவில் வீடு திரும்­பிய போது மனை­வியும், கடைசி மகனும் கட்­டிலில் உறங்­கினர்.

நானும் அவர்­க­ளுடன் இணைந்து உறங்­கினேன். அவ்­வ­ளவும் தான் எனக்குத் தெரியும். அதன் பின்னர் நடந்த விட­யங்கள் எதுவும் எனக்குத் தெரி­யாது. சம்­பவம் நடந்து சில மாதங்­களின் பின்­னரே எனக்கு நினைவு மீண்­டது. அப்­போது நான் வைத்­தி­ய­சாலை கட்­டிலில் இருந்தேன்.

இந்த சம்­பவம் தொடர்பில் தஸ்­லீமின் மனை­வி­யான பாத்­திமா ஜன்னத் எம்­முடன் தனது நினை­வு­களை பகிர்ந்து கொண்டார்.

‘‘துப்­பாக்கிச் சூட்டுச் சம்­பவம் இடம்­பெற்ற போது கணவர் தஸ்­லீ­முடன் நானும் எனது சிறிய மகனும் கட்­டிலில் உறங்­கி­யி­ருந்தோம். மார்ச் 9ஆம் திகதி அதி­காலை 4.30 மணி­ய­ளவில் இந்த துப்­பாக்கிச் சூடு நிகழ்ந்­தது.

பயங்­க­ர­வா­திகள் சமை­ய­லறை கத­வினை உடைத்­துக்­கொண்டு வீட்­டினுள் நுழைந்து, நாங்கள் உறங்­கி­யி­ருந்த கட்­டிலின் அருகே காணப்­பட்ட ஜன்னல் கதவை திறந்­து­விட்டு வெளியே சென்­றுள்­ளனர். வெளியே நின்­ற­வாறு சத்தம் வெளி­வ­ராத வகையில் சைலன்­சரை பயன்­ப­டுத்­தியே இந்த துப்­பாக்கிச் சூட்­டினை மேற்­கொண்­டுள்­ளனர். இதனால் பாரிய சத்தம் எதுவும் எழ­வில்லை.

சிறிய சத்­த­மொன்­றுதான் எனது காதுக்கு கேட்­டது. கைத்­தொ­லை­பே­சியின் சார்ஜர் வெடித்­தி­ருக்­கலாம் என நினைத்தேன். எனினும் அவ்­வாறு எதுவும் நடக்­க­வில்லை. பின்னர் மின்­சாரக் கோளாறு ஏற்­பட்­டி­ருக்­கலாம் என்று பரி­சோ­தித்தேன். அப்­ப­டி­யு­மில்லை.

இந்நிலை­யில்தான் அறை­யினுள் தூர்­நாற்­ற­மொன்று வீசி­யது. இது தொடர்பில் கண­வ­ரிடம் வின­வினேன். அவ­ரி­ட­மி­ருந்து பதி­லெ­து­வு­மில்லை. அப்­போ­துதான் அவர் மயக்­க­முற்று கட்­டி­லி­லி­ருந்து கீழே விழப்­போ­வதை உணர்ந்தேன். அவர் இறந்­து­விட்­ட­தா­கவே நினைத்து, கட்­டிலில் அவரைப் பாது­காப்­பாக  கிடத்­தி­விட்டு அய­ல­வர்­களை அழைப்­ப­தற்­காக அறை­யி­லி­ருந்து வெளி­யே­றினேன்.

அப்­போ­துதான், சமை­ய­லறை கதவின் ஒரு பாதி திறக்­கப்­பட்­டி­ருப்­பதைக் கண்டேன். வெளியே சென்று அய­ல­வர்­களை அழைத்த போது, வீட்டின் பின் பக்­க­மா­க­வி­ருந்து இருவர் ஓடு­வதை இரு­ளுக்குள் மத்­தியில் கண்டேன். இதனால் துப்­பாக்­கி­தா­ரி­கள்தான் வீட்­டுக்கு வந்­தி­ருப்­பதை உணர்ந்து கொண்டேன்.

பின்னர் கண­வரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்றோம். இந்த சம்­ப­வத்தின் போது வீட்­டி­லி­ருந்த ஒன்­பது வய­தான எனது மகன் அதிர்ச்­சி­ய­டைந்து கடு­மை­யாக   பாதிக்­கப்­பட்டார். இன்று வரை அவர் அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து மீள­வில்லை.

மீண்டும் நாம் தஸ்­லீ­முடன் பேசினோம். அவர் மேலும் பல தக­வல்­களை பகிர்ந்து கொண்டார்.

Q: உங்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தி­ய­வர்­களை எவ்­வாறு இனங்­காண முடிந்­தது?

கடந்த செப்­டம்பர் 12 ஆம் திகதி மான­வல்லை நீதி­மன்றில் இடம்­பெற்ற விசா­ர­ணை­களின் போது என்னைச் சுட்ட இரு­வரை அடை­யாளம் காட்­டினேன். அவர்கள் இரு­வரும் இந்த சம்­ப­வத்­திற்கு இரு வாரங்­க­ளுக்கு முன்னர் என்­னுடன் தொலை­பேசில் தொடர்­பு­கொண்டு என்னை நேரில் சந்­திக்க வேண்­டு­மெனக் கூறினர்.

அவர்­களின் கோரிக்­கைக்­கி­ணங்க மாவ­னெல்லை சம்பத் வங்­கிக்கு அருகில் நான் அவர்­களைச் சந்­தித்தேன். அதன்­போது, ஆடுகள் தொடர்­பிலும் என்­னு­டைய வீட்­டி­லுள்ள ஆட்டுத் தொழுவம் தொடர்­பிலும் கேள்வி எழுப்­பினர். இதனால் அவர்கள் எனது வீட்­டுக்கு முன்­கூட்­டியே வத்து சென்­றுள்­ளதை நான் அறிந்­து­கொண்டேன்.

எனினும் இவர்கள் என்னைக் கொல்­வ­தற்­கா­கவே சதி செய்­கின்­றனர் என்­பதை நான் உண­ர­வில்லை. குறித்த அந்த நபர்கள் இரு­வ­ரையும் அடை­யாள அணி­வ­குப்­பின்­போது நீதி­மன்ற வளா­கத்தில் கண்ட போதே, இவர்கள் என்னை கொல்­வ­தற்­கா­கவே தேடி வந்து சந்­தித்­தனர் என்­பதை முதன் முறை­யாக உணர்ந்தேன்.

Q: உங்கள் மீது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொண்­ட­வர்கள் யார் என்று தெரி­யுமா?

குறித்த சம்­பவம் இடம்­பெற்ற போது இவர்கள் யார் என்று தெரி­யாது. எனினும் பயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவின் ஆயுதப் பிரிவு பிர­தா­னி­யாக கரு­தப்­படும் மொஹம்மட் மில்ஹான் மற்றும்  சஹ்­ரானின் சார­தி­யான கபூர் மாமா ஆகி­யோரை என்னைச் சூடுவதற்கு வந்­த­வர்கள் என்­பதை பின்னர் அறிந்­து­கொண்டேன்.

அது மாத்­தி­ர­மல்­லாமல் மட்­டக்­க­ளப்பு – வவு­ண­தீவு பகு­தியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பொலிஸ் காவ­ல­ரணில் கட­மை­யாற்­றிய பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் இரு­வரை கொலை செய்­து­விட்டு அவர்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரித்த ரிவோல்வர் ரக துப்­பாக்­கிகள் ஊடா­கவே என் மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தையும் பின்னர் நான் அறிந்­து­கொண்டேன்.

Q: தற்­போது உங்­களின் உடல் நிலை எவ்­வா­றுள்­ளது?

இறை­வனின் உத­வி­யி­னாலும் வைத்­தி­யர்­களின் தீவிர முயற்­சி­யி­னாலும் இன்று நான் உயிர் தப்­பி­யுள்ளேன். எனினும் என்னால் எழும்பி நடக்க முடி­யாமல் கட்­டிலில் இருந்­த­வாறே கடந்த 10 மாதங்­க­ளாக சிகிச்சை பெற்று வரு­கின்றேன்.

நாட்டில் அடிப்­ப­டை­வா­திகள் , தீவி­ர­வா­திகள் உரு­வாக இட­ம­ளிக்க கூடாது என்­ப­தற்­கா­கவே நான் எனது பாது­காப்­பையும் பொருட்­ப­டுத்­தாது வணாத்­த­வில்லு வரை சென்று சந்­தேக நபர்­களை தேட பொலி­சா­ருக்கு உத­வினேன். அன்று நான் என்­னையே அர்ப்­ப­ணித்­தது ஏப்ரல் 21 போன்­ற­தொரு அசம்­பா­விதம் நடந்­து­விடக் கூடாது என்ற நோக்­கத்­தி­லேயே ஆகும்.

இந்த உழைப்­பிற்­கான பரி­சா­கவே நான் சுடப்­பட்டேன்.  இதனால், மூன்று குழந்­தை­களைக் கொண்ட எனது குடும்பம் இன்று பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­நோக்­கி­யுள்­ளது.

முஸ்லிம் சமூ­கத்­திற்­கா­கவும் நாட்­டிற்­கா­கவும் நான் செய்த சேவைக்­காக யாசகம் கேட்கும் நிலைக்கு என்னை மாற்றி விட வேண்டாம். நான் எழுந்து நடப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காகவும்,  குடும்பத்தின் பொருளாதார கஷ்டத்திற்காகவும் முடியுமானவர்கள் உதவி செய்யுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

நேர்கண்டவர் – றிப்தி அலி

மூன்று சிறு பிள்ளைகளின் தந்தையான தஸ்லீம் நடமாட முடியாமல் கட்டிலில் தஞ்சமடைந்துள்ளமையினால் அவரது குடும்பம் இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. தஸ்லீமை சந்திப்பதற்காக நாம் நேரில் சென்றபோது இதனை நேரடியாக உணர்ந்துகொண்டோம்.

முஸ்லிம் சமூகம் சார்பில் நாட்டுக்காக அவர் செய்த அர்ப்பணிப்பினாலேயே அவர் இந்த நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார். இதனால் இவர் விடயத்தில் கரிசனை காட்டுவதும் அவரை மீளவும் இயல்பு நிலைக்கு கொண்டுவர கைகொடுப்பதும் அனைவரினதும் பொறுப்பாகும்.

அதற்காக தங்களினால் முடியுமான சிறிய உதவியினை கூட அவருக்கு வழங்க முடியும். இதற்காக ஹற்றன் நெஷனல் வங்கியின் மாவனெல்லை கிளையிலுள்ள அவரது மனைவியான பாத்திமா ஜன்னதின் 089020204155 என்ற வங்கி கணக்கில் தங்களின் நிதியுதவிகளை வைப்பிடலாம்.

இதேவேளை, தஸ்லீமிற்கு உதவுவது தொடர்பில் மேலதிக விபரங்களை பெற 0772391998 எனும் தொலைபேசி இலக்கதின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.