கிண்ணியா படகு விபத்தில் உயிர் தப்பிய சிறுவனின் காணொளியா இது?

கிண்ணியா படகு விபத்தில் உயிர் தப்பிய சிறுவனின் காணொளியா இது?

“கிண்ணியாவில் படகு விபத்து” என்ற தலைப்பில் நீரில் மூழ்கி உயிருக்கு போராடும் சிறுவனின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

 “கிண்ணியா சிறுவன் உயிருடன் மீட்கப்படும் உருக்கமான காட்சி” என்ற தலைப்பில் இந்த காணொளி,வாட்ஸாப் ஊடாகவும் பகிரப்பட்டது. மேற்கூறிய காணொளி குறித்த எமது தேடலில், பங்களாதேஷில் உள்ள சந்த்பூர் முகத்துவாரம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

ஆகஸ்ட் 27, 2021 அன்று, சந்த்பூர் முகத்துவாரத்தில் ஒரு சிறுவன் இழுவை படகில் இருந்து விழுந்தான். பின்னர் படகில் வந்த சிலர் சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இது குறித்து “எக்ஸ்ட்ரீம் லாஞ்ச் லவர் Extreme Launch Lover” என்ற வீடியோ யூடியூப்பில் பதிவிட்டுள்ளது.  நவம்பர் 23, 2021அன்று காலை கிண்ணியா படகு விபத்தில் நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தப் பதிவில் உள்ள காணொளி அந்த சம்பவம் தொடர்பான காட்சி அல்ல. எனவே, சமூக ஊடகங்களில் புழக்கத்தில் உள்ள காணொளி, பங்களாதேஷில் உள்ள சந்த்பூர் கழிமுகம் அருகே முன்னர் நடந்த விபத்தின் காட்சிகள் ஆகும்.

factseeker