வைத்தியர் ஷாபிக்கு பிரமுகர்கள் பாராட்டு; இனவாதிகளுக்கு சிறந்த பதிலடி கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டு

வைத்தியர் ஷாபிக்கு பிரமுகர்கள் பாராட்டு; இனவாதிகளுக்கு சிறந்த பதிலடி கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டு

தனக்கு கிடைக்கப் பெற்­றுள்ள சம்­பளப் பணத்­தினை, தற்­போது நாட்டில் நிலவும் மருந்துப் பற்­றாக்­கு­றையை கருத்திற் கொண்டு வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு மருந்துப் பொருட்­களை கொள்­வ­னவு செய்து வழங்க தீர்­மா­னித்து வைத்­தியர் ஷாபிக்கு பிர­மு­கர்கள் பலரும் பாராட்டுத் தெரி­வித்­துள்­ளனர்.

அத்­துடன் இந்த செயல் மூலம் அவர் இன­வா­தி­க­ளுக்கு தக்க பதி­லடி கொடுத்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க,

"பொய், பொறாமை மற்றும் வெறுப்பு ஆகி­ய­வற்றை அணி­க­ல­னாகக் கொண்­டி­ருந்த சிங்­கள தீவி­ர­வா­தத்தின் வெட்­கக்­கே­டான அத்­தி­யாயம், ஒரு நல்ல தொழில்சார் நிபு­ணரின் வாழ்க்­கையை சீர­ழித்­து­விட்­டது. அவர்கள் உங்கள் மீது உமிழ்ந்த வெறுப்­புக்கு நீங்கள் வழங்­கி­யுள்ள பதி­லுக்கு வாழ்த்­துகள். நேர்­மை­யாக சிந்­திக்கும் சிங்­கள குடி­மக்கள் எப்­போதும் உங்­க­ளோடு இருக்­கி­றார்கள்" எனத் தெரி­வித்­துள்ளார்.

குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­றிய சமயம், சிங்­கள பெண்­க­ளுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக கருத்­தடை செய்­த­தாக பொய்­யாக குற்­றஞ்­சாட்­டப்­பட்டு பத­வி­யி­லி­ருந்தும் இடை­நி­றுத்­தப்­பட்ட டாக்டர் ஷாபியின் சம்­பளப் பாக்­கியை வழங்­கு­மாறு அண்­மையில் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. இதற்­க­மைய தற்­போது அவ­ருக்கு சுகா­தார அமைச்சு சம்­பளப் பணத்தை வழங்­கி­யுள்­ளது.

இது தொடர்பில் டாக்டர் ஷாபிக்கு வாழ்த்துத் தெரி­வித்து வெளி­யிட்­டுள்ள டுவிட்டர் பதி­வி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அதே­போன்று எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவும் தனது டுவிட்­டரில் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

“மதத் தீவி­ர­வா­தத்­திற்குப் பின்னால் பொறா­மையும் குறு­கிய மனப்­பான்­மையும் இருக்­கி­றதே தவிர எந்த மதமும் இல்லை என்­ப­தற்கு டாக்டர் ஷாபியின் வழக்கு ஒரு சிறந்த உதா­ரணம். இன­வா­தி­க­ளுக்கு அவர் பதி­ல­ளித்­துள்ள விதம் உண்­மை­யி­லேயே எம்மை ஈர்த்­துள்­ளது" என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னி­டையே தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவும் இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

"வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீ­னுக்கு எனது பாராட்­டுக்கள். அவ­மானம் என்­பது அவ­ருக்கு எதி­ரான பொய்­களை சமூ­க­ம­ய­மாக்­கிய அனை­வ­ருக்கும், அதை நம்பி அமை­தி­யாக இருந்த அனை­வ­ருக்கும் சொந்­த­மா­னது” என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­போன்று மேலும் பல அர­சியல் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் டாக்டர் ஷாபிக்கு எதிரான இனவாதக் கருத்துக்களைக் கண்டித்துள்ளதுடன் அவர் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli