இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான பரீட்சிப்பு காலம்
P. K. பாலச்சந்திரன்
இந்தியாவானது உலக ஒழுங்கின் தலைசிறந்த கட்டுப்பாளர்களை மீறி தனது "தேசிய நலனை" தொடரக்கூடிய ஒரு சக்தியாக தன்னைப் பார்க்கும் நிலையை அடைந்துள்ளது. மறுக்கமுடியாத அளவிற்கு, இந்தியா தனது கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பெரும் வல்லரசுகளால் இந்தியா வசீகரிக்கப்படுகிறது. அதன் போட்டியாளரான சீனாவும் கூட, எல்லைப் பிரச்சினையை பின்தள்ளி பொருளாதாரத் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது.
பாகிஸ்தானில் வளர்ந்து வரும் அறிவுஜீவிகள் மத்தியில் இஸ்லாமாபாத் இந்தியாவின் எழுச்சியை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதனுடன் பொருளாதார உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காஷ்மீர் பிரச்சினையை பக்கவாட்டில் நிறுத்த வேண்டும் என்றும் குரலெழுப்புகிறது.
சமீபத்தில், பாகிஸ்தான் தான் நடாத்தும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் ஒத்துப்போகாத இந்தியர்களை கலந்துகொள்ளச் செய்தாலும் கூட, இந்தியாவுடன் வெளிப்படையான நட்புறவு சமிஞ்சைகளை மேற்கொண்டது.
சீனாவுடனான இந்தியாவின் உறவுகள் தொடர்ந்து சிக்கலில் உள்ளன, ஆனால் மீண்டும், சமீபத்திய முன்னேற்றங்கள் இருண்ட பாதையின் முடிவில் எவ்வளவு மங்கலாக இருந்தாலும் கூட வெளிச்சம் இருப்பதைக் காட்டுகின்றன.
விரும்பத்தகாத களமட்ட யதார்த்தங்கள்
புறக்கணிக்க முடியாத விரும்பத்தகாத களமட்ட யதார்த்தங்கள் உள்ளன எனக்கூறப்படுகின்றது. சமீபத்திய வாரங்களில், அமெரிக்கா, கனடா மற்றும் பங்களாதேஷ் உடனான இந்தியாவின் உறவுகள் கனடா மற்றும் பங்களாதேஷ் விடயத்தில் மிகக் கடுமையாகவும், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் குறைந்த அளவிலும் என பல்வேறு அளவுகளில் மோசமடைந்துள்ளன.
கனடாவுடனான உறவுகள் உண்மையில் இரத்தக்களரியாக ஆகியுள்ளன. முரண்பாடாக, கனடா, அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனான பிரச்சினைகள், குறைந்த பட்சம் பகுதியளவில், ஏற்கனவே இருக்கும் வல்லரசுகளைப் பின்பற்றுவதற்கான இந்தியாவின் சொந்த முயற்சியின் விளைவு என்பதுடன், அதே போட்டியில் இருப்பதாகக் கற்பனை செய்து மற்றைய நாடுகளில் அதன் விருப்பத்தைத் திணிக்கிறது. அதீத நம்பிக்கையின் காரணமாக இந்தியா அதிகமாக தலையிட்டதுடன், அதற்காக வாங்கிக் கட்டிக்கொண்டது.
கனடா
கனடாவுடனான உறவுகளில் பின்னடைவு சீக்கிய கடும்போக்காளர்கள், பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததிலிருந்து உருவானது. ஆனால் கனேடிய சட்டங்களை மீறும் வரை குடிமக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கனடா வலியுறுத்தும். எந்தவொரு காரணத்திற்காகவும் கிளர்ச்சி செய்வது அருவருப்பானது என்றாலும் அது அமைதியாக இருந்தால் அனுமதிக்கப்படும் என்றும் கனடா வலியுறுத்தியது.
இந்நிலையில், யூன் 2023ல் கனடா மண்ணில் கனேடிய குடியுரிமை பெற்ற சீக்கிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டமை, கனடாவின் கடைசி துரும்பு என நிரூபிக்கப்பட்டது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், பொலிஸ்துறையும் இந்திய உளவு அமைப்புகள் நிஜ்ஜாரை வாடகைக் கொலையாளியைப் பயன்படுத்திக் கொன்றதாகக் குற்றம் சாட்டினர்.
முன்னாள் இந்திய பொலீஸ் விகாஷ் யாதவ், கனடாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து உடந்தையாக இருந்ததாக அவர்கள் மேலும் குற்றம் சாட்டினர்.
தூதர் குமார் வர்மா மற்றும் ஆறு அதிகாரிகள் கனடாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டாலும், ஆனால் அவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்ப அழைக்கப்பட்டதாக இந்தியா கூறியது.
கனேடிய குற்றச்சாட்டை இந்தியா விவரிக்கையில், கனடாவில் உள்ள 770,000 சீக்கியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்திய சீக்கிய எதிர்ப்பு பிரிவினைவாதிகளை கனடா வளர்த்து வருகிறது என்ற எதிர்க் குற்றச்சாட்டை சுமத்தியது.
அமெரிக்கா
அமெரிக்காவும் கனடாவுடன் இணைந்து இந்தியாவிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில், அதனது உளவு நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள எதிர்ப்பாளர்களைக் கொல்ல சதி செய்கிறது என்று குற்றம் சாட்டியது. அமெரிக்க சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூன் இந்திய கொலையார்களின் இலக்காக இருந்ததாக அமெரிக்கா கூறியது.
பன்னூன் வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றதுடன் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஓர் இந்திய முகவர் செக் குடியரசில் இருந்து நாடு கடத்தப்பட்டு விசாரணைக்காக அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டார்.
அமெரிக்க சட்டத்தரணி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் அவர்களை "ஆர்வமுள்ள நபர்" என்று பெயரிடுமளவிற்கு சென்றதுடன் அழைப்பாணையும் அனுப்பினார். இது செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் தோவல் இணைந்து செல்வதைத் தடுத்தது.
ஆனால் இந்தியா திட்டவட்டமாக ஈடுபாட்டை மறுத்ததுடன் நிஜ்ஜாரின் கொலை கனடாவில் சீக்கிய குழு மோதலின் விளைவாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியது. பன்னூன் சம்பவம் தொடர்பில் கூறுகையில், இது கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகளில் தற்போது குஜராத் சிறையில் உள்ள இந்திய குண்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சதித்திட்டமாக இருக்கலாம் என்று இந்தியா கூறியது.
இருப்பினும், கனடாவின் குற்றச்சாட்டுகள் மீதான வெளிப்பாட்டுக்கு மாறாக, பன்னூன் வழக்கில் இந்திய பதிலளிப்பு மௌனமாக்கப்பட்டது. சதித்திட்டத்தின் மர்மத்தை ஆழமாக அறிய, இந்த விடயத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இந்தியா ஒரு குழுவை அமெரிக்காவிற்கு அனுப்பியது.
இந்திய - அமெரிக்க உறவுகள் மேலும் வீழ்ச்சியடையாமல் இருக்க ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்படுவதற்கான சமிஞ்சைகள் உள்ளன. நியூயோர்க் நீதிமன்றத்தில் நடக்கும் பன்னுன் வழக்கில் அமெரிக்கா தலையிட்டு இந்தியாவை சிக்க வைக்குமா என்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால், அமெரிக்காவும் இந்தியாவும் தங்களது உள்ளக விடயங்களை பொது இடத்தில் வெளிப்படுத்தினால் இழப்பு ஏற்படும்.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் உறவுகளைத் தடைசெய்ய அனுமதிக்கும் வகையில் தொடர்புகள் அதிக ஆபத்தில் உள்ளன. இரு தரப்பும் சீனாவை எதிர்கொள்வதற்கான நெருக்கமான பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகளைக் கொண்டுள்ளனர்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆயுத வர்த்தகம் 25 பில்லியன் அமெரிக்க டொலர்களை தொட்டுள்ளது. மோடி சமீபத்தில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ட்ரோன் ஒப்பந்தத்தை மேற்கொண்டார். இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும் குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் அமெரிக்க முதலீடுகள் அண்ணளவாக 49.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன் அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் 4.6 பில்லியன் டொலர்களாகும். ஒப்பிடுகையில், மொத்த இருதரப்பு இந்திய - கனேடிய வர்த்தகம் மிகச்சிறியளவான 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமேயாகும். இதன் காரணமாகவே, அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளில் இந்தியா மென்மையாகவும், கனடாவின் மீது கடுமையாகவும் உள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதில் உண்மையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், சீனாவின் விரிவாக்கவாதத்தை சரிபார்ப்பதில் "மூலோபாய பங்காளர்களாக" இருந்தாலும், அவை வேறுபட்ட உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளைக் கொண்டிருப்பதால், அவை முரண்பாட்டை எதிர்கொள்கின்றன.
கனடாவிலும், அமெரிக்காவிலும் இந்திய பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் அளிக்கப்படும் தளர்வு குறித்து இந்தியா கவலையடைந்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் புது டில்லி கடமைப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவால் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பயங்கரவாதிகளை படுகொலை செய்வது தொடர்பிலான இந்திய பொதுக் கருத்து இந்தியா அதனை செய்ய முடிந்தால் எந்தத் தவறும் இல்லை என்பதாகும். எனவே மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் கரிசனங்களையும் நிர்ப்பந்தங்களையும் தீவிரமாகவும் மரியாதையுடனும் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
இந்தியா மீதான ஒதுக்கி வைக்க முடியாத நலன்களை அமெரிக்கா கொண்டுள்ளது. அது தேவைப்பட்டால் இந்தியா, சீனாவுடன் போருக்குச் சென்று தெற்காசியாவில் அதன் முன்னேற்றத்தை சரிபார்க்கும் என்ற நம்பிக்கையில் இந்தியாவுக்கு இராணுவ ரீதியாக உதவுகிறது.
ஆனால் இந்தியப் பொருளாதாரத்தை விட ஐந்து முதல் ஏழு மடங்கு பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவுடன் போர் எண்ணம் தொடர்பில் இந்தியா தயங்குகிறது. சீனா பலவித வினைத்திறனான ஆயுதங்களை கொண்ட நாடு .
பல இந்திய தொழிற்துறைகள் சீனாவிலிருந்தான இடைநிலை பொருட்களின் இறக்குமதியை சார்ந்து இருப்பதால், சீனாவுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ள முடியாது. இந்தியா தனது தொழில்களை செயற்படுத்த ஆண்டுதோறும் 100 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை சீனாவிடமிருந்து வாங்குகிறது. இந்தியா - சீனா எல்லையில் தடுப்புக் காவலில் ஈடுபடுவதில் இந்தியா ஆர்வமாக உள்ளதுடன், அதை அடைவதற்கு, அது அமெரிக்க இராணுவ உபகரணங்களை வாங்க விரும்புகிறது. இதுவே அந்த விடயமாகும்.
சீன - இந்திய எல்லை ஒப்பந்தம்
அமெரிக்காவுடனான அதன் முரண்பாடு காரணமாக, 4,000 கிமீ இந்தியா-சீனா எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகள் குறித்து சீனாவுடன் சில உடன்படிக்கைக்கு வர இந்தியா முயற்சிக்கிறது. தன் பங்கில், சீனா இந்தியாவை அமெரிக்க முகாமில் இருந்து விலக்க விரும்புகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒக்டோபர் 23 அன்று ரஷ்யாவின் கசானில் 16வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது சந்தித்தனர். அவர்கள் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் "முழுமையான இராணுவ நீக்கம்" செய்வதற்கு ஒப்புக்கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பிலிருந்தும் இராணுவத்தினர் சர்ச்சைக்குரிய பிரிவுகளில் ரோந்து செல்ல அனுமதிப்பது உள்ளடங்கும். இந்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, இது எல்லை மோதல்களைத் தடுப்பதையும், சச்சரவுகள் ஏற்படும் போது நாடுகள் "விரைவாகத் தணிக்க முடியும்" என்பதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பெய்ஜிங் அடுத்த கட்டத்தில் "இந்திய தரப்புடனான திட்டத்தை முறையாக அமுல்படுத்த" செயற்படும் என்று சீனா கூறியது.
2020-ல் கல்வானில் நடந்த எல்லை மோதலில் 20 இந்திய மற்றும் 4 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சிறிய மோதல்கள் நடந்தன, இது சர்ச்சைக்குரிய நீட்டிப்புகளில் நெருக்கமாக இருக்கும் துருப்புக்களுக்கு இடையே பெரிய மோதல்கள் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியது.
புதுடில்லியில் உள்ள Observer ஆராய்ச்சி மன்றத்தில் மனோஜ் ஜோஷி கூறுகையில், "கசான் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீராக்க முயற்சிக்கும் ஓர் முக்கிய படிநிலையாகும். "இரு நாடுகளும் முரண்பாட்டைக் குறைக்க முயற்சிக்கின்றன, ஆனால் நிச்சயமாக இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்." என்றார்.
ஆனால் விமர்சகர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) பிரகாஷ் கடோச் கூறுகையில், இந்தியா உரிமை கோரும் 65 ரோந்துப்பணி இடங்களில் 26 இடங்களில் இன்னமும் இந்தியப் படைகளால் ரோந்து செல்ல முடியவில்லை.
சீனா தனது சந்தையை இந்திய பொருட்களுக்கு அதிகமாக திறக்காத நிலையில், சீன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான விசா விதிமுறைகளை இந்தியா தளர்த்தியுள்ளது என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலத்திரனியல் துறையில் சீன முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனங்கள் இப்போது கூட்டு முயற்சிகளில் சிறிய வணிகங்களை மேற்கொள்ளலாம்.
நடுநிலை கருத்தாளர்களின் கூற்றுப்படி, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகள் உள்ளதுடன் கணிசமான இருதரப்பு உரையாடலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இல்லை. இது இந்தியா-பாகிஸ்தான் உறவுகளுக்கும் பொருந்தும். காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் (LAC) ராணுவத்திற்கிடையான ஒப்பந்தம் காரணமாக அமைதி நிலவுகிறது. ஆனால் பாகிஸ்தானில் காஷ்மீர் மற்றும் இந்தியாவில் பாக்கிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றிய அரசியல் சொல்லாடல்கள் தடையின்றி தொடர்கின்றன. ஏனென்றால், இரு நாடுகளையும் பிரிக்கும் பிரச்சினைகள் தேர்தல் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பங்களாதேஷ்
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பெரும் வெற்றியாகக் குறிப்பிடப்பட்ட இந்தியா-பங்காளதேச உறவுகள், ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான ஒரு மக்கள் இயக்கத்தால் ஷேக் ஹசீனா ஆட்சியை வன்முறையில் தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து ஓகஸ்ட் மாதத்தில் அடிமட்டத்தை அடைந்தது.
இயக்கத்தின் பின்னணியில் இருந்த சக்திகள் ஹசீனாவை இந்தியாவின் சேவையாளராக பார்த்ததில் இருந்து இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவின் உதவியுடன் அவர் தேர்தலுக்குப் பிறகு இரும்புக் கரம் கொண்டு ஆட்சியமைக்க முடியும் என்று கருதப்பட்டது. தப்பியோடிய ஹசீனாவுக்கு புது டில்லியில் அடைக்கலம் கொடுக்கப்பட்டமையானது அந்தக் கோட்பாட்டை உறுதிப்படுத்துவதாகத் தோன்றியது.
ஹசீனாவுக்கும் தனக்கும் எதிரான வெறுப்பின் அளவைக் கண்டு இந்தியா ஆச்சரியப்பட்டது. புதுடில்லி அரசு விரும்பத்தகாததாக ஆனது. ஆனால் இந்திய ஊடகங்கள் டாக்காவின் அடுத்த அரசாங்கத்திற்கெதிராக முனைப்பாக எதிர்ப்பு தெரிவித்தன.
மக்கள் இயக்கம் பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவின் செயற்பாடாக பார்க்கப்பட்டது. இந்திய ஊடகங்கள் பங்களாதேஷ் - எதிர்ப்பு பிரச்சாரங்களைக் குறைக்காதவரை, இந்திய - வங்காளதேச நல்லுறவுக்கான வாய்ப்புகள் மங்கலாகவே காணப்படும்.
P.K. பாலச்சந்திரன் கொழும்பில் உள்ள ஒரு சுயாதீன ஊடகவியலாளரென்பதுடன் பல ஆண்டுகளாக பல்வேறு செய்தி இணையதளங்கள் மற்றும் நாளிதழ்களில் தெற்காசிய விவகாரங்கள் குறித்து எழுதுகிறார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் எக்னாமிஸ்ட் ஆகியவற்றிற்கு கொழும்பு மற்றும் சென்னையில் இருந்து அறிக்கை அளித்துள்ளார். இலங்கையில் டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே ஆகிய பத்திரிக்கைகளில் வாராந்த பத்தி ஒன்றை எழுதுகின்றார்.
Comments (0)
Facebook Comments (0)