இரு மாவட்ட செயலாளர்கள் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமனம்
புத்தளம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களாக பணியாற்றியவர்கள் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் இன்று (18) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டச் செயலாளராகச் சேவையாற்றிய கே.ஜீ.விஜேசிறி - கிராமிய வயல்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராகவும், திருகோணமலை மாவட்டச் செயலாளராக சேவையாற்றிய சமன் டீ. பாடிகோரால - கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து, புதிய செயலாளர்கள் தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)