இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு சவூதி உதவும்
உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு தேவையான கொவிட் - 19 தடுப்பூசிகளைப் பெறுவதற்கு தேவையான உதவிகளை வழங்க சவூதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பினை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் எச். அல் ஹாரீத் மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரிற்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று (27) செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போதே தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சவூதி அரேபிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரீக் எம்டி ஆரிபூல் இஸ்லாம் மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தானின் பதில் உயர் ஸ்தானிகர் தன்வீர் ஏ. பாதி ஆகியோரும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினை நேற்று தனித் தனியாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
Comments (0)
Facebook Comments (0)