ஊசி ஏற்ற வந்தோர் மீது குண்டாந்தடி தாக்குதல்
கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்காக வந்திருந்த பொதுமக்கள் மீது, அங்கு கடமையிலிருந்த பொலிஸார் குண்டாந்தடி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், அவ்விடத்திலிருந்து அகன்று சென்றபொதுமக்கள் 'ஹூ' சத்தமிட்டுஇ பொலிஸாரை கேலி கிண்டல் செய்த வண்ணம் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்தச் சம்பவம், மாத்தறை - வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் நேற்று முன் தினம் (01) தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது. அவ்வாறு வந்த பொதுமக்கள் மீது, பொலிஸ் உயர் அதிகாரியொருவர் குண்டாந்தடியால் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
போதுமானளவு தடுப்பூசிகள் அந்த மையத்தில் இல்லாமையினால், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடைநடுவிலேயே நிறுத்தப்பட்டது. அது தொடர்பில் பொதுச் சுகாதார அதிகரிகள், வரிசையில் நின்றவர்களுக்கு அறிவித்துள்ளனர்.
எனினும், அம்மக்கள் அங்கிருந்து செல்லாது, வரிசையிலேயே நீண்டநேரம் காத்திருந்துள்ளனர். இது தொடர்பில் வெலிகம பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
அதனையடுத்தே, அங்கு விரைந்த பொலிஸார், குண்டாந்தடி பிரயோகத்தை மேற்கொண்டு மக்களை அங்கிருந்து விரட்டினர்.
The HQI of the Weligama police in action.
— Rehaan Jayawickreme(RJ)රෙහාන් ජයවික්රම (@RehanJayawick) September 2, 2021
This was during a vaccination drive in Weligama Today. @SriLankaPolice2 #lka#weligama #COVID19 pic.twitter.com/yF2VvFDAXY
Comments (0)
Facebook Comments (0)