சவூதியில் வாழும் இலங்கையர்களினால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

சவூதியில் வாழும் இலங்கையர்களினால்  மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

சவூதி அரேபியாவில் வாழும் இலங்கை சமூகத்தினரால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில் ரியாத்தில் உள்ள இலங்கையின் கலாச்சார மன்றத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 1.2 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மினி ஒட்சிசன் செறிவூட்டிகளின் ஒன்பது அலகுகள் இந்த நன்கொடையில் உள்ளடங்குகின்றன.

இந்த மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அனுப்புவதனை ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஆதரவுடன் ஒருங்கிணைத்தது.

இந்த இக்கட்டான காலங்களில் இலங்கையில் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்க உதவும் முகமாகஇ சரியான நேரத்தில் இந்த நன்கொடைகளை வழங்கியமைக்காக சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை சமூகம் மற்றும் ரியாத்தில் உள்ள இலங்கையின் கலாச்சார மன்றத்தை தூதரகம் பெரிதும் பாராட்டுகின்றது.