ஆறுமுகன் தொண்டமின் இடத்திற்கு ஜீவன் நியமனம் எனும் வர்த்தமானி வெளியீடு
ஆறுமுகன் தொண்டமின் மறைவினை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆறுமுகன் தொண்டமின் திடீர் மறைவினை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் வெற்றிடம் ஏற்பட்டது.
இந்த வெற்றிடத்திற்கு அவருடைய புதல்வாரன ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சகார காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததனை அடுத்தே இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)