ஜம்இய்யாவின் உப செயலாளர் பதவியிலிருந்து முர்ஷித் முழப்பர் இராஜினாமா
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உப செயலாளர் பதவியிலிருந்து அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முர்ஷித் முழப்பர் இன்று (10) வியாழக்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த உத்தரவு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இடம்பெற்ற சம்பவமொன்றினை அடுத்தே இந்த இராஜினாமாவினை அவர் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு ஜம்இய்யா சார்பில் ஆஜராகிய அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் உரிய தெளிவை அவரிடமிருந்து பெறுவதற்காக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு அவசரமாக இன்று (10) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் தலைமையகத்தில் கூடியது.
மேற்படிக் கூட்டத்தில் ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் குறித்த விடயத்தை விசாரித்தறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித், குறித்த விசாரணை முடியும் வரை ஜம்இய்யாவின் உதவிப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீங்கிக் கொள்வதாக எழுத்து மூலம் ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு அறியத் தந்துள்ளார். ஜம்இய்யாவும் அவரது குறித்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளது".
Comments (0)
Facebook Comments (0)