கொழும்பு துறைமுக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா கோரிக்கை
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வதற்காக 2019ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒத்துழைப்பு உடன்படிக்கையை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பாக உள்ளதென கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிராலய பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கை தொடர்பான உறுதிப்பாடு தலைமைத்துவ மட்டம் உட்பட இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பல தடவைகள் இந்தியாவிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மூன்று மாதங்களின் முன்னர் இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததையும் அவர் நினைவுபடுத்தினார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் 100% வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையினாலேயே இயக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்த நிலையிலேயே இந்திய உயர் ஸ்தானிராலய பேச்சாளரின் அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)