உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சினோபாமா அங்கீகரிப்பு

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சினோபாமா அங்கீகரிப்பு

கொவிட் - 19 நோய்க்கு எதிராக சீனாவின் சினோபாமா தடுப்பூசியினை பயன்படுத்தலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் இன்று (07) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதற்கமைய உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொவிட் - 19 இற்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட ஆறவாது தடுப்பூசி இதுவாகும்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் இந்த விடயம் தொடர்பில் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அடுத்த வாரம் முதல் சினோபாமா தடுப்பூசியினை இலங்கையர்களுக்கு ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசூமான தெரிவித்தார்