லுக்மான் ஹரீஸின் Wisdom at Our Doorstep நூல் வெளியீடு

 லுக்மான் ஹரீஸின் Wisdom at Our Doorstep நூல் வெளியீடு

பிரித்தானியாவினை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கை எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வருமான லுக்மான் ஹரீஸினால்எழுதிய Wisdom at Our Doorstep  எனும் நூலின் வெளியீட்டு விழா அண்மையில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் பி. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில் நீதிக் கதைகளின் ஊடாக நல்லிணக்கம் (Harmony through Parables) எனும் தலைப்பில் கோட்டை வல்பொல ராகுல நிலையத்தின் தலைவரும், களனி பல்கலைக்கழக வரலாற்று துறையின் தலைவருமான கல்கந்தே தம்மானந்த தேரர் சிறப்புரையாற்றினார்.

முன்னணி பத்திரிகைகளின் எழுத்தாளரான லுக்மான் ஹரீஸினால் இதுவரை எழுதியுள்ள நான்கு நூல்கள் பிரித்தானியா மற்றும்அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.


இவரின் ஐந்தாவது நூலான Wisdom at Our Doorstep, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினையும் ஒற்றுமையினையும்வலியுறுத்தியுள்ளது.

Hameedia My Friend செயற்த்திட்டத்தினால் வெளியிடப்பட்ட  இந்த நூலின் வெளியீட்டு விழா பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.