சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதில் இலங்கை அரசாங்கம் பாரபட்சம் இன்றி செயட்பட வேண்டும்: SLMDI UK
சட்ட, ஒழுங்கை நிலை நாட்டுவதில் இலங்கை அரசாங்கம் பாரபட்சம் இன்றி செயட்பட வேண்டும் என பிரித்தானியாவினை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பான SLMDI UK தெரிவித்தது.
SLMDI - UK அமைப்பினருக்கும் பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் மனிஷா குணசேகரவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08) வியாழக்கிழமை லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களை பாதுகாக்க தவறியுள்ளது என்பதை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரிடம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலைமை தொடருமாக இருந்தால் SLMDI UK அமைப்பானது சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டி வரும் என்பதை மேற்படி சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றினையும் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் மூலமாக இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது SLMDI – UK அமைப்பினால் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.
Comments (0)
Facebook Comments (0)