கொரோனாவினால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்; அமெரிக்காவும் வரவேற்பு
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனைக் கூறினார்.
நீரின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று பரவாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நேற்று (09) சபையில் தெரிவித்திருந்த நிலையில், தற்போதாவது அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என பாராளுமன்ற உறுப்பினர் வினவினார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என பிரதமரை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியினை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz தெரிவித்தார்.
இது தொடர்பில் அவரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பதிவொன்றினை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பான தீர்மானத்தினை திருத்தி நடைமுறைப்படுத்துவது சாதகமான நடவடிக்கையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Welcome media reporting on PM’s announcement to end mandatory cremation of COVID victims. Implementation of a revised practice that is in line with international public health norms and respects religious rites is a positive action.
— Ambassador Teplitz (@USAmbSLM) February 10, 2021
Comments (0)
Facebook Comments (0)