ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த ராஹுல ஹிமி
இலங்கை முஸ்லிம்களோடு சகவாழ்வை பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் பொஹவந்தலாவ ராஹுல ஹிமியிற்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (30) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
மாளிகாவத்தையிலுள்ள ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, பொருளானர் கலீல் மௌலவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அல்குர்ஆன் மொழிபெயர்ப்பொன்றும் தேரக்கு வழங்கப்பட்டது. பொதுத்தளங்களில் இலங்கை வாழ் முஸ்லிம்களிற்கு எதிராக முன்வைக்கப்படும் இனவெறுப்பு கருத்துக்களுக்கு எதிராக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பேஸ்புக் நேரலை பேட்டியொன்றில் காத்தான்குடி வீதிகளில் நூறு சாதுக்களோடு தர்ம பாத்திரமேந்தி நடந்து வர ஆசைப்படுவதாகவும், அந்த பாத்திரங்களை காத்தான்குடி மக்கள் தங்களது பேரன்பினால் நிரப்புவார்கள் என்று நம்புவதாகவும் சொல்லியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-முஜீப் இப்ராஹீம்-
Comments (0)
Facebook Comments (0)