ஹுசைன் பைலா, இம்தியாஸ், அசாத் சாலியின் பெயர்களும் தேசியப்பட்டியலில்
சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமகி ஜன பலவேகய கட்சியின் தேசியப் பட்டியல் நியமன பெயர் பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதி அமைச்சர் ஹுசைன் பைலாவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சமகி ஜன பலவேகய சார்பில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயலாளர் சபீல் நளீமி ஆகியோரின் பெயர்களும் சமகி ஜன பலவேகய கட்சியின் தேசியப் பட்டியல் நியமன பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)