'நியாயமான விமர்சங்களை முன்வைக்கும் ஊடகவியலாளர்களின் பொறுப்பினை பறிக்க முடியாது'
நியாயமான விமர்சங்களை முன்வைப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் உள்ள பொறுப்பை பறிக்க முடியாது என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தெரிவித்தது.
அத்துடன் மக்களின் சுகாதார நலனுக்கு கேடுவிளைவிக்கும் காரணிகள் தொடர்பாக நியாயமான விமர்சங்களை முன்வைப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் உள்ள பொறுப்பையும் பறிக்க முடியாது என கொழும்பு மாவட்ட நீதிபதி அருண அளுத்கே தெரிவித்தார்.
MTV Channel தனியார் நிறுவனத்திற்கு எதிராக George Steuart Health தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் நேற்று (02) வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போதே மாவட்ட நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார் என நியூஸ் பெஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)