இலங்கைக்கான ஈரான் தூதுவராக அலிரேசா டெல்கோஷ் நியமனம்
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக கலாநிதி அலிரேசா டெல்கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படவுள்ள இவர், இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது தகுதிச் சான்றுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (24) செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தார்.
Comments (0)
Facebook Comments (0)