கிழக்கு ஆளுநரின் கொவிட் செயலணியில் முஸ்லிம் பிரதிநிதியும் உள்ளடக்கம்
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதின் கொவிட் - 19 செயலணியில் முஸ்லிம் பிரதிநியொருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
இதறக்மைய, அனஸ் அஹமட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், 'விடியல்' இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் ஏழு பேரைக் கொண்ட விசேட கொவிட் செயலணியொன்று மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டது.
கொவிட் இடர்நிலை தொடர்பில் பெதுமக்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் முஸ்லிம் பிரதிநிதியொருவர் உள்ளடக்கப்படாமை தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேற்று (26) புதன்கிழமை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதினை 'விடியல்' இணையத்தளம் இன்று (27) வியாழக்கிழமை தொடர்புகொண்ட போது, "குறித்த செயலணியில் முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த அனஸ் அஹமட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த செயலணியில் இருவர் நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.
இது தொடர்பில் நான் ஆளுநரிடம் விடுத்த வேண்டுகோளிற்கமையவே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)