இலியாஸ் அப்துல் கரீமின் நன்கொடையில் மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் 4 மாடி கட்டிடம் நிர்மாணம்
அஷ்ரப் ஏ சமட்
பிரபல தொழில் அதிபர் இலியாஸ் அப்துல் கரீமின் நன்கொடையில் தெஹிவளை மூர் வீதியிலுள்ள மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட 4 மாடி கட்டிடம் இன்று (19) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
சுமார் 24 பேர்ச் காணியில் அமையப் பெற்றுள்ள இந்த பாடசாலையில்இ 289 மாணவ மாணவிகள் தரம் 1 முதல் 11ஆம் வகுப்பு வரை கல்வி பயிலுகின்றனா். 22 ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த 40 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த பாடசாலை இயங்கி வருகின்றது.
இந்த நிலையில் மெலிபன் ஆடைத் தொழிற்சாலையின் உரிமையாளா் இல்யாஸின் நன்கொடையின் கீழ் 4 மாடிகளை கொண்ட கட்டிடமொன்று இப்பாடசாலையில் நிர்மாணிக்கபபட்டுள்ளது.
கடந்த 3 வருட காலமாக கட்டிடம் நிர்மாணிக்கும் வரை போதிய வகுப்பறை கட்டிடம் இன்மையால் அருகில் உள்ள மெதடிஸ் கல்லுாாியில் இப்பாடசாலையின் ஆறு வகுப்பறைகள் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.சுஹார் தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி மற்றும் அஷ்ஷெய்க் யூசுப் முப்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)