ஸகாத், சதகா, சகாதுல் பித்ர் விநியோகமும் வீடு வீடாக யாசகம் சேர்ப்பதை தடுப்பதும்
ஸகாத், சதகா, சகாதுல் பித்ர் விநியோகமும் வீடு வீடாக யாசகம் சேர்ப்பதை தடுப்பதும் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் நினைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம்.அஷ்ரபினால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"சகாதுல் பித்ர் வேலைத் திட்டமொன்றை இது கொழும்பு – 07, ஜாவத்தை பள்ளிவாசலினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் அரிசி அல்லது அதற்குரிய பணம் பெறுமதியாக பள்ளிவாசலின் இந்த திட்டத்திற்கு கொடுக்கலாம்.
ஆனால் பள்ளிவாயல் சகாதுல் பித்ரை அரிசியாகவே கொடுக்கும். இவ்வாறு ஒவ்வொரு பள்ளியும் சகாதுல் பிதரை சேர்த்து விநியோக்குமாறு வேண்டப்படுகின்றன.
இது போன்று, மக்கள் வீடு, வீடாக செல்வதை தடுத்து ஸகாத் மற்றும் சகாக்களை சேர்த்து பள்ளி மூலம் விநியோகிப்பதற்கு திட்டமிட்டு செயலாற்றவும். இதன் ஊடாக ஏழைகள் வீடு வீடாகச் செல்ல வேண்டிய தேவையொன்றில்லை.
பள்ளிவாயல்கள் சகாதுல் பித்ர், ஸகாத், சதகா அனைத்தையும் சேர்த்து விநியோகம் செய்யும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவன் மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
ரமழான் 25 அல்லது 26 க்கு முன்னர் பள்ளிவாயல்கள் இவற்றை சேர்த்து ரமழான் 27க்கு முன்னர் மக்களுக்கு கிடைக்கச் செய்ய முடியுமாக இருப்பின் சிறந்தது. அதனூடாக கொவிட் 19 பரவலைத் தடுக்கவும் ரமழானை கண்ணியப்படுத்தவும் முடியும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)