கட்டாரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களுக்கு தங்குமிடம் வழங்க நடவடிக்கை

கட்டாரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களுக்கு தங்குமிடம் வழங்க நடவடிக்கை

கட்டாரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களுக்கு தற்காலிக நடவடிக்கையாக தங்குமிட வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்குமாறு கட்டாரிலுள்ள இலங்கைக்கான பதில் தூதுவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுத்தல் வெளிவிவகார செயலாளர் ரவிநாத்  ஆரியசிங்கவினால் இன்று (25) திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான ஆலோசனையிலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கட்டார் தலைநகரான டேஹாவிலிருந்து இன்று பயணிப்பதற்காக அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்  தீடிரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதனால் பல இலங்கையர்கள் டேஹாவில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்களிற்கு உதவுவதற்காகவே வெளிவிவகார செயலாளரினால் இந்த அவசர அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயந்த கொலம்பபே தெரிவித்தார்.

அண்மையில் நாட்டுக்கு திரும்பிய பலருக்கு கொவிட்  -19 தொற்ற இனங்காப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.