Social Distance பேணாதவர்கள் கைது செய்யப்படுவர்: DIG அஜித் ரோஹன
சமூக இடைவெளியினை (Social Distance) பேணாதவர்கள் மற்றும் அதற்கு உதவுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த கைது நடவடிக்கை நாளை 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.
அது போன்று முகக் கவசம் அணியாது பொது இடங்களில் பயணிப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
இதேவேளை, திரையரங்குகள், உடற் பயிற்சி நிலையங்கள் மற்றும் SPA ஆகியன திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் சலூன் மற்றும் அழகுக் கலை நிலையங்கள் சுகாதார திணைக்கள வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)