உயர் தர, புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

உயர் தர, புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர (உயர் தர) மற்றும் தரம் 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் ஆகிய பரீட்சைகளுக்கான திகதிகள் கலவி அமைச்சினால் இன்று (09) வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தரம் 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி நடைபெறும்.

அதேவேளை, கல்வி பொதுத் தராதர (உயர் தர) பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.