அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் வியாழன் திறப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள இலங்கை தூதுவராலயம் எதிர்வரும் மே 28ஆம் திகதி வியாழக்கிழமை வழமையான தூதரக செயற்பாடுகளுக்காக திறக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் - 19 தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பெரிய ஒன்றுகூடல்களை குறைத்து வழமையான சேவைகளை மாத்திரம் இதன்போது வழங்கப்படவுள்ளது.
தேவைப்படும் சேவைகளை சுருக்கமாக விளக்கி தூதரகத்தின் consular.slembabudhabi@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் முன்கூட்டியே குறிப்பிட்ட நேரமொன்றினை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடைமுறை திறமையான சேவைகளை வழங்கவும், உங்களுக்கு நேரிடும் அசௌகரியங்களை குறைப்பதற்கும், அமீரகம் வாழ் இலங்கை மக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்ப்பதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதுவராலயம் தெரிவித்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் கடமையாற்றும் சில நபர்களுக்கு கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டதினை அடுத்து கடந்த மே 20ஆம் திகதி முதல் தூதுவராலயம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)