இலங்கை உயர் ஸ்தானிகரின் 'நியமனச் சான்றினை' இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதில் உண்மையில்லை
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொடவின் 'நியமனச்சான்றினை' இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று (06) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"புதுடில்லிக்கு வருகைதந்திருக்கும் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ள அசோக மிலிந்த மொரகொடவின் 'நியமனச்சான்று' குறித்து வெளியாகியுள்ள பல்வேறு ஊடக அறிக்கைகள் தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளவரின் 'நியமனச்சான்றினை' இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)