அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்
வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வெகுசன ஊடக அமைச்சில் வைத்து அமைச்சரினால் இன்று (13) திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
தலைவர் : அசங்க பிரியநாத் ஜயசூரிய
பணிப்பாளர் சபை:
• பேராசிரியர் திரு. சமிந்த ரத்னாயக
• பேராசிரியர் திரு. டி.எம். அஜித் திசாநாயக்க
• சட்டத்தரணி திரு. ரகித அபேகுணவர்தன
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு
தலைவர் : கணக்காளர் திரு. கணக அமரசிங்க
பணிப்பாளர் சபை:
• சட்டத்தரணி திரு. லலித் பியும் பெரேரா
• விரிவுரையாளர் திருமதி. மஹேஸ்வரி மஹிமதாஸ்
• திரு. ரவிந்திர குருகே
• திரு. இந்திக லியனஹேவகே
• திரு. ஹசந்த ஹெட்டியாராச்சி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
தலைவர் : திரு. ஹட்சன் சமரசிங்க
பணிப்பாளர் சபை:
• பேராசிரியர் வண. மாகம்மன பஞ்ஞானந்த தேரர்
• திரு. பிரியந்த கே. ரத்னாயக
• திரு. ஜே. யோகராஜ்
• திரு. எம்.சிசிர குமார
Comments (0)
Facebook Comments (0)