ஞானசார தேரர் நீதியாக செயற்படுவார்: அமைச்சர் சந்திரசேன
'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் அனைவருக்கும் நீதியாக செயற்படுவார் என காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
திருகோணமலையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
"அனைவரின் மனதில் எழுந்துள்ள ஒரு கேள்வியாக 'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் விடயத்தில் ஜனாதிபதி ஞானசார தேரரை தலைவராக நியமித்தது ஏன் என்பதாகும்
ஞானசார தேரர் அனைவருக்கும் நீதியாக செயற்படுவார் என்று நினைப்பதோடு உங்களுக்கு தெரியும் பாடசாலை அதிபர் மாணவ தலைவரை நியமிக்கின்ற பொழுது சுட்டி தனமாகவும் கெட்டித்தனமாகவும் செயற்படுகின்றவர்களை நியமிப்பது உண்டு இதனை அதிகமானவர்கள் அறிந்து கொள்வதில்லை.
அது போலவே ஜனாதிபதி ஞானசார தேரரிடம் இதனை கையளித்துள்ளார். இவர் அடுத்தவர்களையும் முகாமைத்துவம் செய்து தனது செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும் அதனை ஜனாதிபதி செய்துள்ளார்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)