நான்கு மாவட்டங்களுக்குள் நுழையவும், வெளியேறவும் முடியாது (curfew updates)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நான்கு மாவட்டங்களுக்குள் நுழையவும், அங்கிருந்து வெளியேறவும் முடியாது என ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று (20) திங்கட்கிழமை அறிவித்தது.
இதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள்ளேயே நுழையவும், அங்கிருந்து வெளியேறவும் முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய 21 மாவட்டங்களிலுள்ள அபாய பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தினந்தோறும் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் − அங்கு 24ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாக்கப்படும் ஊரடங்கு உத்தரவு, 27ஆம் திகதி காலை 5 மணி வரை தொடரும்.
Comments (0)
Facebook Comments (0)