தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் - இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் - இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (21) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதில் அரசியல் தீர்வு சம்மந்தமாக இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் மாகாண சபைத் தேர்தல் உடன் நடாத்தப்பட வேண்டுமென்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் தமிழர் தேசத்தில் நடைபெறும் பிரச்சனைகளை ஆவணப்படுத்துவதற்கு தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டதன் பிற்பாடு இந்திய உயர் ஸ்தானிகரிடம் ஒப்படைப்பதாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் அபிவிருத்தி தொடர்பிலும் மீனவர்களின் பிரச்சனைகள் பற்றியும் இங்கு முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, குறித்த சந்திப்பிற்கு முன்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது. இதன்போது தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.