'சுகாதார துறையினரின் அனுமதியின்றி நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்'
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சுகாதார துறையினரின் அனுமதியின்றி நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரான டாக்டர் சுகுனன் குணசிங்கம் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் சுகாதார துறையினரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதனையும் மீறி சுகாதார துறையின் அனுமதியின்றி நிகழ்வுகள் எதுவும் நடைபெற்றால் அது தொடர்பில் புகைப்படத்துடன் விபரம் வழங்கவும். குறித்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என டாக்டர் சுகுனன் குணசிங்கம் மேலும் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)