SLBC முஸ்லிம் சேவைக்கு ஆலோசனை சபை நியமனம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவைக்கான ஆலோசனை சபையொன்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் நேற்று (09) புதன்கிழமை நியமிக்கப்பட்டது.
தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஜகத் விக்ரமசேன, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் சரூக், பிரபல வாத்தகரும் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசல் உப தலைவருமான முஸ்லிம் சலாஹுத்தீன், பிரபல வர்த்தகரும் கண்டி லைன் பள்ளிவாசல் தர்மகர்த்தாவுமான அப்ஸால் மரிக்கார், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர் மற்றும் கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவரும் வக்பு சபை உறுப்பினருமான மௌலவி பஸ்லுர் ரஹ்மான் ஆகியோர் இந்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களாவார்.
Comments (0)
Facebook Comments (0)