பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் பதவி; பொறுப்பேற்கவுள்ள முஸ்லிம் எம்.பிக்கள்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் பதவியினை எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.
இதனையடுத்து குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல பிரதேசங்களின் அபிவிருத்திக் குழு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட் குறித்த பதவியினை பொறுப்பேற்ற நிலையில் ஏனையவர்கள் பொறுப்பேற்காமால் இருந்தனர்.
இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் எம்.எம். முஷாரப் ஆகியோர், தங்கள் தேர்தல் தொகுதியிலுள்ள பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவர் பதவியினை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)