சட்டவிரோத பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை கண்டிக்கும் அமைச்சர் ஹரீன்
மேல் மாகாணத்தின் ஏழு பொலிஸ் பிரிவுகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக “கொட்டாகோகம” வளாகத்தில் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாபெரும் ஜனநாயகப் போராட்டத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட சட்டவிரோத பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
நான் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பினை ஏற்று அவரது அரசாங்கத்தில் இணைந்துகொண்டது, வரவிருக்கும் பேரழிவைத் தோற்கடிப்பதற்கு என்னால் முடியுமான முயற்சிகளை எடுப்பதற்காகவே அன்றி, யாரையும் காப்பாற்றுவதற்காக அல்ல.
வரவிருக்கும் பேரழிவை தோற்கடிக்கவும் அதே வேளையில், இந்தப் போராட்டத்தை வெல்வதிலும் நாம் ஒன்றாகப் பயணிப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)