கடற்படையினர், அவர்களது குடும்பத்தினர் மீது பாகுபாடு காட்ட வேண்டாம்: பாதுகாப்பு செயலாளர்

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது பாகுபாடு காட்ட வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (29) புதன்கிழமை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடற்படை வீரர்கள் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியதை அடுத்து கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது பாகுபாடு காட்டப்படுகின்றன என தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.