இணையத்தின் ஊடாக ரயில் பயணச்சீட்டு
இணையச் சேவையின் ஊடாக (ஒன்லைன்) ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் நடைமுறை நேற்று (18) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
"இதற்கென அலைபேசி செயலியொன்று (Mobile App) தயாரிக்கப்பட்டுள்ளது” என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
கடனட்டையை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டினை ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொள்ள பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், இந்தச் செயலியை மேம்படுத்தியதன் பின்னர், ரயில் அனுமதிச் சீட்டை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
"எதிர்வரும் சில தினங்களில் அனைத்து ரயில் சேவைகளுக்குமான பயணச்சீட்டுகளை ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்” என மேலும் தெரிவித்தார்.
"ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்காக மாத்திரமே இந்தச் சந்தர்ப்பத்தைத் தற்போது வழங்கியுள்ளதாகவும் புதிய கட்டமைப்பொன்றை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தியதன் பின்னர், பயண அட்டை மூலமாக செயற்படுத்தக் கூடிய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் கூறினார்.
Comments (0)
Facebook Comments (0)