முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் விபரம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2022/2023ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகாரின் தலைமையில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
கடந்த 12ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பேராளர் மாநாட்டின் போது புதிய தலைவியாக புர்கான் பீ இப்திகாரும், பொதுச் செயலாளராக எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மதும், பொருளாளராக சிஹார் அனீஸும், செயற்குழு உறுப்பினர்களாக சாதிக் ஷிஹான், ஜெம்சித் அசீஸ், எம்.ஏ.எம். நிலாம், கலைவாதி கலீல், ஜாவித் முனவ்வர், எஸ்.எம்.எம். முஸ்தபா, நுஸ்கி முக்தார், எம்.எப்.ரிபாஸ், ஷாமிலா செரீப், சமீஹா சபீர்;, எம்.எஸ்.எம்.ஸாகிர், டீ.ஜீ.எம்.எஸ்.எம். ராபி, எம்.எம். ஜெஸ்மின், ஜே.எம். நாளிர், சீ.எம். சுபைர் ஆகியோர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
இதற்கு மேலதிகமாக தலைவிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் தாஹா முஸம்மில், ஷம்ஸ் பாஹிம் ஆகியோர் செயற்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இந்த கூட்டத்தின் போது இந்த வருடத்துக்கான பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் ஏனைய பதவிகளுக்குமான தெரிவுகளும் இடம்பெற்றன.
பொதுக் கூட்டத்தில் அதிகளவான உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் தலைவர் என்.எம் அமீனும் செயற்குழுவில் இணைக்கப்பட்டார்.
இதற்கு மேலதிகமாக உப தலைவர்களாக எம்.ஏ.எம் நிலாம், கலைவாதி கலீல் ஆகியோரும், தேசிய அமைப்பாளராக மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபாவும், உப செயலாளர்களாக சாதிக் ஷிஹான், ஜாவித் முனவ்வரும், உதவி பொருளாளராக ஜே.எம்.நாளிர், சஞ்சிகை ஆசிரியர்களாக சாமிளா சரீப், ஷம்ஸ் பாஹிம், பயிற்சிப் பிரிவு பிரதானியாக சமீஹா சபீர்;, இணையத்தள ஆசிரியராக டீ.ஜீ.எம்.எஸ்.எம்.ராபி, ஊடக இணைப்பாளராக எம்.எஸ்.எம்.ஸாகிர் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த புதிய ஐம்பது ஊடகவியலாளர்களுக்கான ஆறு மாத கால தொடர் பயிற்சி வழங்க இந்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)