நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக கல்முனையில் விழிப்புணர்வு பதாகை திறப்பு
-எம்.என்.எம்.அப்ராஸ்-
நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கிலான விழிப்புணர்வு பதாகையொன்று கல்முனை பொது பஸ் தரிப்பிடத்தில் இன்று (07) செவ்வாய்க்கிழமை திரைநீக்கம் செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சமாதானமும் சமூகப் பணியும் அமைப்பின் அனுசரணையில் இயங்கும் கல்முனை நல்லிணக்க மன்றங்களின் ஏற்பாட்டிலேயே இந்த பதாகை நிறுவப்பட்டுள்ளது.
'இணைந்த கரங்கள் தோற்பதில்லை' எனும் தொனிப்பொருளில் நல்லிணக்கத்தால் எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம் இலங்கையர்களாய் ஒன்றிணைவோம் எனும் நல்லிணக்க வாசகத்தை இந்த விழிப்புணர்வு பதாகை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை நல்லிணக்க மன்றங்களின் இணைப்பாளர்காளான வேலுப்பிள்ளை தங்கவேல், எஸ்.எல். அஸீஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற கல்முனை மேயர் ஏ.ஏம்.ரக்கிப் இந்த விழிப்புணர்வு பதாகையினை திரைநீக்கம் செய்தார்.
இதனை தொடர்ந்து கல்முனை மேயர் அலுவலகத்தில் நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
Comments (0)
Facebook Comments (0)